உள்நாட்டு செய்திகள்

விடுதலைப்புலிகளின் தலைவருக்கு என்ன நடந்தது என்பது மக்களிற்கு தெரியும்! கோட்டாபய விளக்கம்

பௌத்த மத தலைவர்களும் மக்களும் நான் பாதுகாப்பு செயலாளராகயிருந்த வேளை செயற்பட்ட விதத்தில் தற்போது செயற்படவேண்டும் என எதிர்பார்க்கின்றனர் அவ்வேளை மேற்கொண்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் விடுதலைப்புலிகள் இயக்க பயங்கரவாதிகள் என்னை இலக்குவைத்து குண்டை வெடிக்கவைத்தனர். அதன் பின்னர் விடுதலைப்புலிகளின் தலைவரிற்கு என்ன நடந்தது என்பது மக்களிற்கு தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.

நந்தனசேன கோட்டாபய ராஜபக்க்ஷவின் குணாதிசயத்திற்கு ஏற்ப செயற்பட நான் தயார் என்றாலும் எதிர்கட்சியினர் போல மோசமான அரசியலில் ஈடுபட நான் தயாரில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தவறிழைத்தவர்களை தண்டிக்கவேண்டியது நீதித்துறையே என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி முன்னைய அரசாங்கம் போல நான் நீதித்துறையின் செயற்பாடுகளில் ஈடுபடவும் அரசியல் பழிவாங்கலில் ஈடுபடவும் தயாரில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top