உலகம்

விமான சேவை டிச. 31 வரை ரத்து

சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை ரத்து டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, கடந்த மார்ச் மாதத்தில் இருந்து சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக நவம்பர் மாதம் இறுதி வரை சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது டிசம்பர் 31 வரை நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் சரக்கு சேவை விமானங்களுக்கும், வந்தே பாரத் திட்டத்தின் மூலம் அரசின் அனுமதி பெற்று வெளிநாடுகளில் இருந்து வரும் சிறப்பு விமானங்களுக்கு மட்டும் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top