உலகம்

விவாகரத்தாகி 9 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பிரபு தேவாவுக்கு திருமணம்?

நடன கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய பிரபுதேவா, பின் நடிகர், இயக்குநர் என அவதாரமெடுத்தார். இவரது நடனத்துக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதேபோல் இவர் இயக்கிய தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்திருக்கின்றன.

பிரபுதேவாவுக்கும் ரமலதாவுக்கும் திருமணமாகி 3 மகன்கள் உள்ளனர். அதில் கடந்த 2008-ம் ஆண்டு மூத்த மகன் விஷால் மூளை கட்டியால் பாதிக்கப்பட்டு 12 வயதில் உயிரிழந்தார். இதையடுத்து 2010-ம் ஆண்டு பிரபுதேவாவின் மனைவி ரமலதா விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். நயன்தாரா – பிரபுதேவாவுக்கு இடையேயான காதல் தான் ரமலதா விவாகரத்து கோரியதற்கு முக்கிய காரணம் என்றும் கூறப்பட்டது.மேலும் பிரபுதேவா – நயன்தாராவை திருமணம் செய்து கொண்டால் தான் உண்ணாவிரதம் இருப்பேன் என்றும் ரமலதா தெரிவித்தார். அப்போது பல்வேறு மகளிர் அமைப்புகள் ரமலதாவுக்கு ஆதரவு தெரிவித்தன. 2011-ம் ஆண்டு பிரபு தேவா – ரமலதா தம்பதி விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின்னர் நயன்தாரா – பிரபுதேவா காதலிலும் விரிசல் ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். ஆனால் அதற்கான காரணத்தை இதுவரை இருவரும் வெளிப்படுத்தியதில்லை. தற்போது 47-வயதாகும் பிரபு தேவா ஒருவரை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதனை பிரபுதேவா தரப்பில் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top