உலகம்

விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா -முகக்கவசம் அணியாவிட்டால் ஆறு மாதம் சிறை அல்லது ரூ.5000 அபராதம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறைதண்டனை அல்லது ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனோவைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவ சிகிச்சை தவிர தொற்று பரவலைத் தடுக்க புதிய விதிமுறைகளும் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த மார்ச் 14-ம் தேதி கொரோனா கண்டறியப்பட்டதையடுத்து தொற்றுநோய் சம்பந்தப்பட்ட சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், தனிமைப்படுத்துவது உள்ளிட்ட விதிகளை மீறுவது குற்றமாகும்.

மாநில அரசின் இந்த தொற்று நோய் சட்டதிருத்தத்திற்கு ஆளுநர் பேபி ராணி மவுரியா ஒப்புதல் அளித்ததையடுத்து இது நடைமுறைக்கு வந்துள்ளது. விதிகளை மீறுவோருக்கு  6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர். கொரோனா பரவலையடுத்து 1897 ஆம் ஆண்டில் தொற்றுநோய்கள் தடுப்புச் சட்டத்தில் கேரளா மற்றும் ஒடிசா மாநிலங்கள் திருத்தம் செய்தன. தற்போது சட்டதிருத்தம் மேற்கொண்ட 3வது மாநிலமாக உத்தரகாண்ட் உருவெடுத்துள்ளது. இதனிடையே உத்தரகாண்ட் மாநிலத்தில் கொரோனா வைரஸ் நோய் தொடர்பான ஒவ்வொரு உயிரிழப்பையும் தணிக்கை செய்து, அவற்றின் பின்னணியில் உள்ள காரணங்களை ஆய்வு செய்யுமாறு அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா -முகக்கவசம் அணியாவிட்டால் ஆறு மாதம் சிறை அல்லது ரூ.5000 அபராதம்

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top