உள்நாட்டு செய்திகள்

வெள்ளவத்தையில் ஒரே நாளில் 48 கொரோனா நோயாளர்கள் அடையாளம்

வெள்ளவத்தையிலும் வெல்லம்பிட்டியிலும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது அதன்படி கொழும்பில் நேற்று அடையாளம் காணப்பட்ட 245 நோயாளர்களில் 48 பேர் வெள்ளவத்தையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேநேரம் 42 பேர் வெல்லம்பிட்டியிலிருந்தும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இலங்கையில் நேற்றைய தினம் 592 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. அவர்களில் 245 பேர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், களுத்துறை மாவட்டத்தில் 140 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, கொவிட் -19 இரண்டாவது அலையின்போது களுத்துறை மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 84 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கம்பஹா மாவட்டத்தில் 66 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் 15 பேர் நீர் கொழும்பு சிறைச்சாலையைச் சேர்ந்தவர்கள்.

இரத்தினபுரி மாவட்டத்தில் 17 பேர், மாத்தளை மாவட்டத்தில் 16 பேர், குருணாகல் மாவட்டத்தில் 14 பேர் மற்றும் காலி மாவட்டத்தில் 13 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கேகாலை, கண்டி, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் தலா 12 பேர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் 09 பேர், மாத்தறை மாவட்டத்தில் 07 பேர், நுவரெலியா மாவட்டத்தில் 06 பேர், அம்பாறை மாவட்டத்தில் 04 பேர், திருகோணமலை மாவட்டத்தில் 04 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் அம்பாந்தோட்டை, அனுராதபுரம் மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் தலா 03 பேர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top