உள்நாட்டு செய்திகள்

வைத்தியசாலையின் மருத்துவர் உட்பட ஆறு பணியாளர்களுக்கு கொரோனா

பாணந்துறையில் உள்ள மருத்துவமனையின் மருத்துவர் உட்பட 6 மருத்துவமனை ஊழியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அண்மையில் கொவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார் என்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டநிலையில் நடத்தப்பட்ட விசாரணையில் சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டது இதனையடுத்து நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் மருத்துவர் உள்ளிட்ட ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.அத்துடன் அவர்கள் கொரோனா சிகிச்சை மையங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டனர். இதனையடுத்து அவர்களது உறவினர்கள் மற்றும் பிற மருத்துவமனை ஊழியர்கள் இன்று (7) அதே மருத்துவமனையில் PCR பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையில், மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் ஒருவர், மருத்துவமனையின் பல பிரிவுகள் தற்காலிகமாக மூடப்பட்டு, கிருமி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top