உலகம்

வைரலாகும் அரவிந்த் சாமியின் எம்.ஜி.ஆர். லுக்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்கி உள்ளார். இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர்.

எம்.ஜி.ஆரின் நினைவு நாளான இன்று, நடிகர் அரவிந்த் சாமி தான் எம்.ஜி.ஆர். தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது: புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆராக 1 மணிநேரம் நடித்தது வெறும் கெளரவம் மட்டும் அல்ல பெரிய பொறுப்பு. என் மீது நம்பிக்கை வைத்த இயக்குனர் ஏ.எல். விஜய் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. தலைவரின் நினைவாக இந்த புகைப்படங்களை இன்று வெளியிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அரவிந்த்சாமி அச்சு அசல் எம்.ஜி.ஆர் போலவே இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர். தலைவி படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top