உள்நாட்டு செய்திகள்

ஹிக்கடுவை கடலில் மிதந்துவந்த பெண்ணின் சடலம்!

ஹிக்கடுவை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக கடற்கரையில் மிதந்து கொண்டிருந்த பெண்ணொருவரின் சடலமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஹிக்கடுவை – களுப்பே பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிாிழந்தவராவார். இவரின் பாதணிகள் சோடியும் கடற்கரையில் வைத்து கண்டெடுக்கப்பட்டுள்ளதோடு இவரது உடல் பிரேத பாிசோதனைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண் இரண்டு நாட்களுக்கு முன் தனது வீட்டிலிருந்து காணாமல் போயிருந்ததாக விசாரணைகளிலிருந்து தொிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுள்ளனர்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top