உள்நாட்டு செய்திகள்

10 வருடங்களுக்கு பின் பராக்கிரம சமுத்திரத்தில் 10 வான்கதவுகள் திறப்பு- மக்கள் அவதானமாக இருக்க வேண்டுகோள்!

பொலன்னறுவை மாவட்டத்தில் இன்று பெய்த கன மழை காரணமாக பராக்கிரம சமுத்திரத்தில் 10 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. 10 வருடங்களுக்கு பின்னரே இவ்வாறு இந்த வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக பொலன்னறுவை வலய நீர்ப்பாசன பணிப்பாளர் ஹோவா கம தெரிவித்தார். 10 வான்கதவுகளில் 8 வான்கதவுகள் 1 அடி அகலத்தில் திறக்கப்பட்டுள்ளது. 2 வான்கதவுகள் 2 அடி அகலத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து நிமிடத்திற்கு 1620 கன அடி நீர் வெளியேறுவதாகவும் அவர் கூறினார்.

அத்தோடு தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் இருப்பதாக தெரிவித்த அவர், சமுத்திரத்தை அண்டிய பகுதியில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் தெரிவித்தார். பராக்கிர சமுத்திரத்தில் வான்கதவுகள் திறக்கப்பட்டதினால் பொலன்னறுவை மட்டக்களப்பு வீதியில் கல்லேல என்ற இடத்தில் வீதி நீரில் மூழ்கியுள்ளது. இதனால் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.m (அரசாங்க தகவல் திணைக்களம்)

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top