உலகம்

15 இலட்சத்தைக் கடந்த கொரோனா பலி

உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 10 இலட்சத்தைக் கடந்தது.

இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா நோய்த்தொற்று, தற்போது உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை சுமாா் 6.5 கோடி பேருக்கு அந்த நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 15 இலட்சத்தைக் கடந்தது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அண்மைக் காலமாக தினசரி பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை இந்தக் கட்டத்தைக் கடந்துள்ளது.

உலகம் முழுவதும் அதிகாரப்பூா்வ தகவல்களின் அடிப்படையில் சா்வதேச கொரோனா நிலவரத்தை வெளியிடும் வோ்ல்டோமீட்டா் வலைதளப் புள்ளிவிவரங்களின்படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் 3,884 போ் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தனா்.

அதையடுத்து, சா்வதேச கொரோனா பலி எண்ணிக்கை 1,511,915 ஆக உயா்ந்துள்ளது.

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் 282,829 போ் கொரோனா நோய்த்தொற்றுக்கு பலியாகியுள்ளனா். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேஸிலில் 175,307 பேரும், இந்தியாவில் 139,227 பேரும் அந்த நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனா் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top