2020ஆம் ஆண்டு தோல்வியடைந்த தமிழ் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் மற்றும் தோல்வியடைந்த படங்களின் தகவல்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் டகால்ட்டி, ஜிப்ஸி, வால்டர், நான் சிரித்தால் என தமிழ் முன்னணி நடிகர்களின் படங்கள் சில உள்ளன. வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக தோல்வியை சந்தித்த திரைப்படங்கள் மட்டும் இந்த பட்டியலில் தொகுக்கப்பட்டுள்ளது.
1. டகால்டி வகை Action வெளியீட்டு தேதி 31 Jan 2020 நடிகர்கள் சந்தானம்,ரித்திகா சென் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகிய நகைச்சுவை திரைப்படம், இப்படத்தில் நடிகர் யோகி பாபு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியது, ஆனால் இப்படத்தின் காட்சிகள் மற்றும் நகைச்சுவைகள் ரசிகர்களை கவரவில்லை.
2. மாஃபியா அத்தியாயம்-1
வகை Action ,Crime ,Thriller வெளியீட்டு தேதி 21 Feb 2020 நடிகர்கள் அருண் விஜய்,பிரசன்னா இயக்குனர் காத்திக் நரேன் இயக்கத்தில் பிரமாண்ட வெற்றி பெற்றுள்ள “துருவங்கள் பதினாறு” திரைப்படத்திற்கு பின்னர் இவர் இயக்கியிருக்கும் திரைப்படம். இப்படத்தின் எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது. ஆனால் இப்படத்தின் காட்சிகள் மிகவும் மெல்ல நகர்ந்துள்ளதால் இப்படம் மோசமான விமர்சனங்களில் தோல்வியை சந்தித்துள்ளது.
3. நான் சிரித்தால் வகை Comedy வெளியீட்டு தேதி 14 Feb 2020 நடிகர்கள் ஹிப்ஹாப் தமிழா ஆதி,ஐஸ்வர்யா மேனன் இயக்குனர் சுந்தர்.சி தயாரிப்பில், இசையமைப்பாளர் ஆதி நடிப்பில் உருவான காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படம். இப்படத்தின் காட்சிகள் மிகவும் எதார்த்தமாக உள்ளதால் இப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.
4. சீறு வகை Action, Drama வெளியீட்டு தேதி 07 Feb 2020 நடிகர்கள் ஜீவா,ரியா சுமன் நடிகர் ஜீவா நடிப்பில் ஒரு சுவாரஸ்ய திரைக்கதையில் உருவான அதிரடி திரைப்படம். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாவும் தோல்வியை சந்தித்துள்ளது.
5. நாடோடிகள் 2 வகை Action, Documentary, Social வெளியீட்டு தேதி 01 Feb 2020 நடிகர்கள் சசி குமார்,அதுல்யா ரவி இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து உருவாகியிருக்கும் அதிரடி திரைப்படம். முதல் பாகத்தில் குடும்பம் மற்றும் நட்பு என இந்த இரண்டையும் அடிப்படையாக கொண்டு உருவாகி பிரபலமானது, ஆனால் இந்த திரைப்படம் அரசியல் சார்ந்த பல வசனங்கள் கொண்டு உருவாகி தோல்வியை சந்தித்தது.
