உள்நாட்டு செய்திகள்

25 பேருக்கு இதுவரை புதிதாக கொரோனா தொற்று உறுதி

பொலன்னறுவை மாவட்டத்தில் நீதி அமைச்சின் கீழ் செயற்படும் சேனாபுர புனர்வாழ்வு நிலையத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,642 ஆக அதிகரித்துள்ளது. அந்த வகையில் நாட்டில் இன்று இதுவரை 25 புதிய கொரோனா தொற்று உறுதியான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதே வேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 1981 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது, 650 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top