உலகம்

4 இந்தியர்களுடன் ரோலர் படகு கடற்படையினால் பொறுப்பேற்பு

இலங்கை கடற்படையினரினால் வடக்கு கடல் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் சட்டவிரோதமாக நாட்டின் கடல் எல்லைப் பகுதிக்குள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்ட 4 இந்தியர்கள் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பயன்படுத்திய ரோலர் படகினையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கொவிட் தொற்று காரணமாக அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள வரையறுக்கப்பட்டிருந்த தேவையற்ற மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் நடவடிக்கையை கடற்படையினர் கடந்த வாரம் தொடக்கம் மீண்டும் ஆரம்பித்துள்ளனர். இந்த நடவடிக்கையின் கீழ் இந்திய மீன்பிடி வல்லங்களுடன் 5 பேர் கடந்த 15 ஆம் திகதி கடற்படையினரினால் கைது செய்யப்பட்டனர்.

இதற்கமைவாக இன்று மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top