பொழுது போக்கு

6ம் எண்ணில் பிறந்தவர்கள் இப்படியானவர்களா??

நேர்மையே குறிக்கோளாகக் கொண்டவர்கள் 6ம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள்.

பிறருக்கு உதவி செய்வதில் வல்லவர்கள். தன்னலம் கருதாமல் விட்டுக் கொடுப்பார்கள். மிகவும் பொறுமைசாலிகளாக இருந்தாலும் சில நேரங்களில் கோபம் கொள்வதும் உண்டு.-

தற்பெருமைக்கும், புகழ்ச்சிக்கும் ஆசைப்படாதவர்கள் என்பதால் இவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுவதில்லை.

எதிலும் சாமர்த்தியமாகப் பேசி பிறரை தம் வசப்படுத்திக் கொள்வார்கள்.

ஆனால், சில நேரங்களில் மற்றவரின் மனதை புண்படுத்தக்கூடிய அளவிற்கு ஒரு சொல் என்றாலும் மறக்க முடியாத அளவிற்கு பேசி விடுவார்கள்.

கேலியும், கிண்டலும் நையாண்டித் தனமும் அதிகம் இருக்கும். குதர்க்கமாகவும், பரிகாசமாகவும் பேசி எதிரிகளை அவமானப்படுத்தி விடுவதில் சாமர்த்திய சாலிகள். பிடிவாத குணம் படைத்த இவர்கள் பிறருக்கு அடிபணிவதென்பது இயலாத காரியம்.

இவரிடம் எவ்வளவு குறைகள் இருந்தாலும் அதை மறைத்து மற்றவர்களின் குறைகளை அம்பலமாக்கி விடுவார்கள். தனக்கு நெருங்கியவர்கள் நெறி தவறும் போது இவருடைய மனநிலை இவரின் கண்களில் தெரியும்.

நீதியை நிலை நாட்ட வேண்டும் என்ற இலட்சியம் கொண்டவர்கள். எந்த காரியத்திலும் இலாப நஷ்டத்தை ஆராய்ந்து பார்த்த பின்தான் செயலில் இறங்குவார்கள்.

தனக்கு மிஞ்சியதைத்தான் பிறருக்கு தானமாக கொடுப்பார்கள். சமூக நல்லப்பணிகளிலும் ஆர்வம் இருக்கும்.

எப்பொழுதும் தம்மை அழகாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் உடையவர்கள்.

குடும்ப வாழ்க்கை திருப்தியளிப்பதாகவே அமையும். பெரும்பாலானவர்கள் காதல் விஷயங்களில் வெற்றி பெற்று தன் மனதிற்கு பிடித்தவரையே வாழ்க்கை துணையாக அடைவர். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். தெய்வ காரியங்களில் ஈடுபாடு உடையவர்களாக இருப்பார்கள்.

ஆடை, ஆபரணங்களுக்காகவும், ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காகவும் நிறைய செலவு செய்வார்கள்.

சிலர் பிறவியிலேயே செல்வந்தராக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நடுத்தர வர்க்கம் என்றால் பொருளாதார நிலை பற்றாக்குறையாகவே இருக்கும். எவ்வளவு கஷ்டபட்டாவது தம்முடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய அளவிற்கு சம்பாதிக்கக்கூடிய ஆற்றல் இருக்கும்.

புதிதாக பழகுவதற்கு சற்று சங்கோஷப்படுபவர்களாக இருந்தாலும், பழகிய பின் இனிமையானவர்களாக இருப்பார்கள். தனக்கு பிடிக்காதவர்களை சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதுபோல ஓட ஓட விரட்டுவார்கள்.

கலைத்துறை சம்மந்தமானவற்றில் முன்னேற்றமடைவார்கள். சினிமா, சங்கீதம், இசை, நாட்டியம், நாடகம் போன்றவற்றில் பிரகாசம் உண்டாகும்.

அரசாங்க பணிகளில் உயர் பதவிகள் அமையும். ஓவியம் வரைதல், கவிதைகள், பாடல்கள் எழுதுதல் போன்றவற்றில் புகழும், கௌரவமும் கிடைக்கும்.

பெண்கள் உபயோகப்படுத்தக்கூடிய அழகு சாதனப் பொருட்கள், பெண்கள் அணியும் ஆடைகள், பெண்களுக்கான அலங்காரப் பொருட்கள் போன்றவற்றிலும் நல்ல இலாபம் அமையும். வாசனை திரவியங்களை வியாபாரம் செய்வதால் நல்ல இலாபம் கிடைக்கும்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top