தனது தேடு பொறி சேவையை அவுஸ்திரேலியாவிலிருந்து நீக்கப் போவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. செய்தி நிறுவனங்களுடன் ஆதாய உரிமைகளை கூகுள் நிறுவனம் பகிர்ந்துகொள்வதற்கு அவுஸ்திரேலியா அரசாங்கம் மேற்கொண்ட நடவடிககைகளை அடுத்தே, கூகுள் நிறுவனம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. ஊடக நிறுவனங்களின் செய்திகளை கூகுள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்வதற்கு பணம் செலுத்தும் வகையில் அவுஸ்திரேலியா ஒரு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதையடுத்து, அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றது. இந்த சட்டம் கடினமானது எனவும், உள்ளுரில் மக்கள் தங்கள் சேவைகளை பயன்படுத்துவதை பாதிக்கும் எனவும் குறித்த நிறுவனங்கள் கூறி வருகின்றன. எவ்வாறாயினும், அச்சுறுத்தலுக்கு தாங்கள் அடிபணியப் போவதில்லை என அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மொரிசன் தெரிவித்துள்ளார்.
