மடூல்சீமை பிட்டமாறுவைப் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு பன்னிரண்டு பேர் அடங்கிய குழுவினர் சுற்றுலா சென்றிருந்தனர். அதில் ஒருவர் உலக முடிவின் பள்ளத்தாக்கில் விழுந்து காணாமல் போயிருந்தார். அவரை தேடும் பணிகளில் மடூல்சீமை பொலிஸாரும் முப்படையினரும் இணைந்து தேடுதல் மேற்கொண்டிருந்தனர். இன்றைய தினம் (9) சடலம் மீட்கப்பட்டதாக மடூல் சீமை பொலிஸார் தெரிவித்தனர்.
