உள்நாட்டு செய்திகள்

பாடசாலை மாணவருக்கு கன்னத்தில் அறைந்த ஆசிரியருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.!

மாத்தறை பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவர் ஒருவரின் கன்னத்தில் அறைந்து, அவரின் கேட்கும் திறனை செயலிழக்கச் செய்த சம்பவத்தில், குறித்த ஆசிரியரும், அரசாங்கமும் பாதிக்கப்பட்ட மாணவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சம்பவம் 2017 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளது. அந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்றைய தினம் உயர்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, பாதிக்கப்பட்ட மாணவருக்கு, குறித்த ஆசிரியர் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும், அரசாங்கம் 5 இலட்சம் ரூபாவும் இழப்பீடு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதாக, நீதிமன்றத்திற்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top