உள்நாட்டு செய்திகள்

“எனக்கு தனிமையில் அந்த பழக்கம் இருந்தது…” வெளிப்படையாக கூறிய ஓவியா..!

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்பிருந்தே எனக்குப் புகை பிடிக்கும் பழக்கம் இருந்தது. தனிமையில் இருக்கும் போது புகை பிடிப்பதை பழக்கமாக கொண்டிருந்தேன் என, நடிகை ஓவியா கூறியுள்ளார். ஒரு கட்டத்தில், புகை பிடித்தால் என்ன ஆகும் என்பதைப் பார்த்ததில் இருந்து புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டேன். ரசிகர்கள் என்னிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை ‘90 எம்.எல்.’ படத்தில் ஓரளவு நிறைவேற்றி விட்டேன். படத்தில் நான் கவர்ச்சியாக நடித்து இருக்கிறேன்.

சினிமா, பொழுதுபோக்கு சாதனம். அதில், பொழுதுபோக்கு அம்சங்களைக் காட்டுவதில் தப்பு இல்லை. எனக்கென்று ரசிகர்கள் ஒரு இடம் வைத்து இருக்கிறார்கள். என்னை நம்பி வருபவர்களை நான் ஏமாற்ற மாட்டேன். இது, ஜாலியான படம். பெண்கள் யாருக்கும் பயப்படக்கூடாது என்ற கருத்து இந்தப் படத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. இவ்வாறு ஓவியா கூறியுள்ளார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top