விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – அரையிறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகின்றன. இதில் உலக தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள செர்பியா நாட்டை சேர்ந்த நோவக் ஜோகோவிச் மற்றும் உலக தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள ஜெர்மனி நாட்டின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் விளையாடினர். இந்தப் போட்டியின் முதல் செட்டை கடுமையாகப் போராடி அலெக்சாண்டர் 6-7(6) கைப்பற்றினார். ஆனாலும், அடுத்தடுத்த செட்களை கைப்பற்றிய ஜோகோவிச் போட்டியில் வெற்றி பெற்றார். ஏறக்குறைய 3 மணிநேரம் 30 நிமிடங்கள் வரை நீடித்த இந்த போட்டியில் 6-7(6), 6-2, 6-4, 7-6(8) என்ற செட் கணக்கில் ஸ்வெரேவை வீழ்த்தி ஜோகோவிச் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். அவர், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அறிமுக வீரராக விளையாடிய அஸ்லான் கரத்சேவ் உடன் அடுத்த போட்டியில் விளையாடுகிறார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top