உள்நாட்டு செய்திகள்

20.02.2021 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? இராசிப்பலன் முழு விபரம்!

  • மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தோற்றப்பொலிவு கூடும். பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
  • ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். தன்னம்பிக்கை குறையும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் தவறுகளை சுட்டிக்காட்டினால் மாற்றிக்கொள்வது நல்லது. பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.
  • மிதுனம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். சகோதர வகையில் ஆரோக்யமான விவாதங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அமோகமான நாள்.
  • கடகம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். புது வேலை கிடைக்கும். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். இனிமையான நாள்.
  • சிம்மம்: உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றிக் கொள்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். நம்பிக்கைக்குரியவர்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள்  எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ் கௌரவம் உயரும் நாள்.
  • கன்னி: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உடல் நலம் சீராகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதுமுதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
  • துலாம்: சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய பிரச்சினைகளை நினைத்து பார்த்து கோபப்பட்டு கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டி கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களை கடிந்து கொள்ளாதீர்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.
  • விருச்சிகம்: பிள்ளைகளை புதியபாதையில் வழி நடத்துவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். புது வேலை கிடைக்கும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வாகனத்தை சரிசெய்வீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் சில
    சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள்.உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். நன்மை கிட்டும் நாள்.
  • தனுசு: குடும்பத்தில் உள்ளவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.
  • மகரம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்கு கிடைக்கும். உத்தியோகத்தில் சகஊழியர்கள் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.
  • கும்பம்: பால்ய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும்.பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
  • மீனம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள்.உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.
Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top