ஆரோக்கியம்

இலங்கையில் இரு தடைகளை அமுல்படுத்துவது தொடர்பில் கவனம்: உருவாக்கப்படும் சட்டங்கள்

இலங்கையில் சிகரெட்டுக்களை சில்லறை விலையில் விற்பனை செய்வதை தடை செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அத்துடன் மதுபானங்களில் கால் போத்தல் மதுபானத்தை விற்பனை செய்வதை தடை செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இந்த விடயத்தை புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் கலாநிதி கமாதி ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதற்கு தேவையான சட்டங்கள் தற்போது உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே புகைப்பழக்கம் காரணமாக இலங்கையில் 60 பேர் தினமும் உயிரிழந்து வருவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. மதுபானம் அருந்துவது காரணமாக தினமும் 55 பேர் உயிரிழந்து வருவதாகவும் அதிகார சபை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top