மட்டக்களப்பு – வெல்லாவெளியில் உள்ள ஓர் ஆலயத்தின் முன் உள்ள கலையரங்கில் கைவிடப்பட்ட நிலையில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டது. போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் உள்ள ஆலயத்திற்கு அருகிலே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. சுமார் 76 வயதுடைய ஆண் ஒருவரின் சடலமே இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. விடயம் தொடர்பில் குறித்த ஆலயத்தின் ஆலய பரிபாலன சபையினர் வெல்லாவெளி கிராம உத்தியோகஸ்தருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்
கிராம உத்தியோகஸ்தர் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்துக்கு தெரியப்படுத்தியதையடுத்து பொலிஸ்சார் சம்பவ இடத்துக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி சடலத்தினை பார்வையிட்டதுடன் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார். போரதீவுப்பற்று பிரதேச சபை இலவச அமரர் ஊர்தியில் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
