உள்நாட்டு செய்திகள்

‘ஹிரு ஸ்டார்’ இசைநிகழ்ச்சியில் உதார கௌசல்ய வெற்றி பெற்றார்

இலங்கை தொலைகாட்சி வரலாற்றில் மிக பிரபல்யமான ”ஹிரு ஸ்டார்” இசைநிகழ்ச்சியில் உதார கௌசல்ய வெற்றி பெற்றுள்ளார். இலங்கை தொலைகாட்சி வரலாற்றில் முதலாவது மாபெரும் இசை நிகழ்ச்சியான ஹிரு ஸ்டார் நிகழ்ச்சியில் அஹுங்கல்லை பகுதியை சேர்ந்த உதார கௌசல்யவே இவ்வாறு வெற்றி பெற்றுள்ளார். இந்த இசை நிகழ்ச்சியின் இறுதி போட்டியில் அமந்தா பெரேரா,உதார கௌசல்ய, விஸ்வ பிரபாத், தில்சான் மதுரங்க ஆகியோர் பங்குகொண்டனர். உதார கௌசல்ய மக்கள் வாக்குகளால் வெற்றி மகுடம் சூடியுள்ளார். விஸ்வ பிரபாத் மூன்றாவது இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

ஹிரு ஸ்டார் போட்டி நிகழ்ச்சியானது இரவு 7.30 மணிக்கு எமது ஹிரு லைஃப் அரங்கத்தில் ஆரம்பமானது பல மில்லியன் கணக்கான மக்களின் கனவை நனவாக்கிய வெற்றியாளருக்கு 35 இலட்சம் ரூபா பெறுமதியான நவீன ரக ஜீப் வண்டியொன்றும், இரண்டு மில்லியன் ரூபா பணப்பரிசோடு ஐந்து மில்லியன் ரூபா பெறுமதியான 12 பாடல் காட்சிகளடங்கிய இசை அல்பம் ஒன்றும் பரிசாகக் கிடைக்கப் பெற்றது. இலங்கையின் ரியாலிட்டி இசை வரலாற்றை மாற்றியமைத்த ஹிரு ஸ்டார் இசை நிகழ்ச்சியானது ரசிகர்கள் தமது அபிமானத்தை வென்ற போட்டியாளருக்கு இப்போட்டியில் பாடிக்கொண்டிருக்கும்போதே தமது வாக்குகளை நேரடியாக பதிவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top