உள்நாட்டு செய்திகள்

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் ரஞ்சன் ராமநாயக்க

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் ராமநாயக்க தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு உச்சநீதிமன்றம் நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்தது. அங்குனுகோலபெலெசா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமநாயக்க நேற்று (வெள்ளிக்கிழமை) சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவ சிகிச்சை பெற்ற பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிறை உடைகள் அணிந்து கையில் ஒரு பை வைத்துக் கொண்டு எம்.பி. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top