உள்நாட்டு செய்திகள்

சனத் ஜயசூரிய மீண்டும் கிரிக்கெட் களத்தில்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளார். இந்தியாவில் எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள Road Safety World Cup இருபதுக்கு இருபது போட்டிகளில் சனத் ஜயசூரிய பங்கேற்கவுள்ளார். பல வருடங்களின் பின்னர், சனத் ஜயசூரியவின் துடுப்பாட்டத்தை ரசிகர்களுக்கு பார்வையிட சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. 1990ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை மிகவும் வேகமான துடுப்பாட்ட வீரராக சனத் ஜயசூரிய திகழ்ந்தார். அதேபோன்று, சகல துறை துடுப்பாட்ட வீரராகவும் சனத் ஜயசூரிய விளங்கினார். இந்த கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் 2ம் திகதி முதல் மார்ச் மாதம் 21ம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top