உள்நாட்டு செய்திகள்

நடு வீதியில் தனது மனைவியை 35 தடவைகள் கத்தியால் குத்திய கணவன்!

திருகோணமலை – கந்தளாய் பகுதியில் தனது மனைவியை கூரிய ஆயுதத்தினால் 35 தடவைகள் குத்தி காயப்படுத்திய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 91ஆம் கட்டை சாந்தியில் நேற்று இச்சம்பவம் நடந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த தனது மனைவியை மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த கணவன் வழி மறித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இருவரும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின்னர் திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்த கூரிய ஆயுதத்தை எடுத்து தனது மனைவியை சரமாரியாக 35 தடவைகள் வெட்டியும்,குத்தியும் படுகாயம் ஏற்படுத்தியுள்ளார். சம்பவத்தில் படு காயமடைந்த பெண் திருகோணமலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்த சம்பவம் தொடர்பில் கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top