தொழில்நுட்பம்

100 செயலிகளை அதிரடியாக நீக்கிய கூகுள்! ஏன் தெரியுமா?

கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரில் இருந்து 100 செயலிகளை அதிரடியாக நீக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூகுள் விதிகளுக்கு புறம்பாக தனிநபர் விவரங்களை சேகரித்து, அவற்றை கொண்டு அச்சுறுத்தல் செய்தல், மக்களை பயமுறுத்துதல், தவறான வகையில் கடன்களை திரும்ப வசூலித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டதாக இந்திய மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் கூகுள் நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுள்ளது.

இந்த தகவல்களின் அடிப்படையில் டிசம்பர் 2020 முதல் ஜனவரி 20, 2021 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் 100 செயலிகளை கூகுள் நீக்கி இருக்கிறது.

அதுமட்டுமின்றி இதுபோன்ற நூற்றுக்கணக்கான செயலிகளை ஆய்வு செய்து, தவறான செயல்களில் ஈடுபட்ட செயலிகள் உடனடியாக நீக்கப்பட்டதாக கூகுள் தெரிவித்து இருக்கிறது.

மேலும் இதே சேவைகளை தொடர்ந்து வழங்கி வரும் இதர செயலிகள் உள்ளூர் சட்ட விதிகளுக்கு உட்பட வேண்டும் என அறிவுறுத்தி இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்து என்பது குறிப்பிடத்தக்தாகும்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top