உள்நாட்டு செய்திகள்

தொண்டமானாறு சின்னக் கடலில் நீராடச் சென்ற வாலிபர் உயிரிழப்பு

தொண்டமானாறு சின்னக் கடலில் நீராடச் சென்றிருந்த நிலையில் அலையில் அள்ளுண்டு சென்றிருந்த வாலிபர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். நீரில் அள்ளுண்டு சென்று சுமார் ஒன்றரை மணி நேரத்துக்குப் பின்பு கடலில் இருந்து குறித்த வாலிபர் மீட்கப்பட்டு, வல்வெட்டித்துறை ஊரணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் உயிரிழந்திருந்ததாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர். உடுப்பிட்டி சந்தை பகுதியைச் சேர்ந்த 17 வயதான வாலிபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியைச் சேர்ந்த ஒன்பது பேர் கடலில் நீராடுவதற்குச் சென்றிருந்த நிலையில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top