விளையாட்டு

‘பிங்க் பால்’ என்றால் இவ்வளவுதான்: எளிமையாக சொல்லி முடித்தார் விராட் கோலி

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் நாளை அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டி பகல்-இரவு போட்டியாக நடக்கிறது. பகல் இரவு டெஸ்ட் போட்டியில் இளஞ்சிவப்பு பந்து (Pink Ball) பயன்படுத்தப்படுகிறது. இளஞ்சிவப்பு பந்து மாலை நேரத்தில் மிக அதிகமான அளவில் ஸ்விங் ஆகும். இங்கிலாந்து பந்து வீச்சாளர்களில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் பந்தை ஸ்விங் செய்வதில் வல்லவர்கள்.

இந்தியா அடிலெய்டு டெஸ்டில் 36 ரன்னில் சுருண்டது. அந்த போட்டியும் பிங்க்-பாலில் நடைபெற்றதுதான். இதனால் இந்தியா சமாளிக்குமா? என கேள்வி எழுந்துள்ளது. ஆனால் பிங்க் பால், எதிரணி பற்றி கவலை இல்லை. பிங்க் பால் போட்டி குறித்து நாங்கள் நன்றாக உணர்ந்துள்ளோம் என விராட் கோலி தெரிவித்துள்ளார். விராட் கோலி இதுகுறித்து கூறுகையில் ‘‘முதல் செசனில் பந்து பேட்டிற்கு சிறந்த முறையில் வரும். அதேவேளையில் பந்தை பார்ப்பது கடினம் என உணர்ந்துள்ளோம். லைட் போட்டபின் முதல் செசனில் பந்து அதிக அளவில் ஸ்விங் ஆகும். பேட்ஸ்மேன் அதற்கு ஏற்றபடி தங்களை மாற்றிக் கொள்வது அவசியம். அதன்பின் மீண்டும் பேட்ஸ்மேன் ஆதிக்கம் செலுத்த வேண்டும்.

எங்களுடைய கவனம் முழுவதும் எங்களுடைய அணியின் மீதே இருக்கும். இங்கிலாந்து அணியின் பலம் மற்றும் பலவீனம் பற்றி நான் ஒருபோதும் கவலை அடைந்தது கிடையாது. பந்து அதிகமாக ஸ்விங் ஆகும் அவர்களுடைய சொந்த மண்ணில் நாங்கள் அவர்களை வீழ்த்தியுள்ளோம். ஒரு அணியாக சிறப்பாக விளையாட வேண்டும். இங்கிலாந்து அணியில் பலவீனம் இருக்கலாம். ஆனால், அவர்களை நாங்கள் வீழ்த்துவதில் ஆர்வமாக உள்ளோம்’’ என்றார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top