ஆன்மீகம்

சிறப்புற நடைபெற்றது திருக்கோணேஸ்வரப் பெருமானின் நகர்வலம்!

தட்சண கைலாயங்களில் ஒன்றான திருகோணமலை திருக்கோணேஸ்வர பெருமானின் நகர்வலம் இன்று (வெள்ளிக்கிழமை) வெகுசிறப்பாக நடைபெற்றது. சிவராத்திரி தினத்தை அடுத்து, திருகோணமலை மாவட்டத்தில் கோணேசப் பெருமானின் நகர்வலம் முன்னெடுக்கப்படுவது வழக்கம். இருப்பினும் இம்முறை கொரோனா பரவல் நெருக்கடி காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் குறித்த நகர்வலம் முன்னெடுக்கப்பட்டது. தொடர்ச்சியாக ஐந்து நாட்களுக்கு திருகோணமலை மாவட்டத்திலுள்ள அனைத்துப் பகுதிகளையும் கோணேசப் பெருமானின் நகர்வலம் சென்றடைவதுண்டு. ஆனால், இம்முறை திருகோணமலை நகர்ப் பகுதியை மாத்திரம் வலம் வருவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்ததன் காரணமாக இம்முறை வீதி அலங்கரிப்புக்கள் குறைவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top