உள்நாட்டு செய்திகள்

உலக வங்கியின் நிதி உதவியில் 495 ஏக்கர் உழுந்து செய்கை!

 

உலக வங்கியின் நிதி உதவியில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு  மாவட்ட விவசாயத் திணைக்களத்தினால் உழுந்து பயிர் செய்கையினை ஊக்குவிக்கு முகமாக உழுத்து  விதைகள் விவசாயிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வு ஆயித்தியமலை பகுதியில் இடம்பெற்றது.

இதன்போது இங்கு வருகை தந்த விவசாயிகளுக்கு உழுந்து விதை உற்பத்தி தொடர்பான பயிற்சியும், நடுகை தொடர்பான செய்முறைப் பயிற்சியும் வழங்கப்பட்டன.

இதன்போது மரப்பாலம் பிரதேசத்தில் 75 ஏக்கரும் ஆயித்தியமலை பகுதியில் 50 ஏக்கரும் இடைக்கால பயிர் செய்கையாக உழுந்து செய்கை பண்ணுவதற்காக தெரிவு செய்யப்பட்டு இவர்களுக்கு  50 வீத மானிய அடிப்படையில் விதைகள் வழங்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் வீ.பேரின்பராஜா, உதவி விவசாயப் பணிப்பாளர்களான கே.கருணாகரன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரி ஏ.ரவிராஜ்,விவசாய போதனாசிரியர்களான கே.கலைமோகன், ஏ.டபிள்யூ. எம். சிபான், விவசாய தொழிநுட்ப உத்தியோகத்தர் தேவரூபன், மற்றும் விவசாயத் திணைக்கள உத்தியாகத்தர்கள் விவசாயிகள் என பலர் கலந்துகொண்டனர்

உழுந்து உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் நோக்குடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக வங்கியின் நிதி உதவியில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தின் விவசாயத் திணைக்களத்தினால் 495 ஏக்கர் செய்கைக்காக 5080 கிலோ கிராம் உழுந்து விவசாயிகளுக்கு அரை மானியத்தில்  வழங்கப்படவுள்ளதாக இந்நிகழ்வில் கலந்துகொண்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் வீ.பேரின்பராஜா தெரிவித்தார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top