உள்நாட்டு செய்திகள்

நியூ ஒலிம்பிக் விளையாட்டு கழகத்தின் மாபெரும் கிரிக்கட் தொடர் – கோவில் போரதீவு உதயதாரகை வெற்றிக் கிண்ணத்தினை சுவீகரித்தது.

களுவாஞ்சிகுடி நியூ ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட இவ் வருடத்துக்கான மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியானது வெகு விமர்சையாக இன்றைய தினம் கழகத் தலைவர் யோ.சதேஷா தலைமையில் நடைபெற்றது. பிரதேசத்தின் பல கிரிக்கட் அணிகள் பங்குபற்றிய இத் தொடரின் இறுதிப் போட்டியில் குருமன்வெளி ரொபின் விளையாட்டுக் கழகத்தினை வெற்றி கொண்டு கோவில் போரதீவு உதயதாரகை அணி இறுதிக் கிண்ணத்தை சுவீகரித்தது. இந் நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், மன்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினருமான மேகசுந்தரம் வினோராஜ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top