அரசியல்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருக்கு மேலும் 14 நாட்கள் விளக்கமறியல் நீடிப்பு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தனை மேலும்  14 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.ரிஸ்வான் உத்தரவிட்டுள்ளார் .

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பூ.விரசாந்தன் மீதான வழக்கு விசாரனை திங்கட்கிழமை(29) எடுத்துக்கொள்ளப்பட்ட போது கொரோணா அச்சம் காரணமாக அவரை நீதிமன்றத்திற்கு அழைத்துவரமுடியாதென சிறைச்சாலை சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இதனை கருத்திற்கொண்ட நீதிமன்றம் மேலும் 14 நாட்களுக்கு, எதிர்வரும் 12.04.2021 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆரையம்பதியில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த அவர், ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த வழக்கின் சாட்சியங்களை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய பூ.பிரசாந்தன் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top