உள்நாட்டு செய்திகள்

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் விசேட கலந்துரையாடல்.

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள திட்டங்கள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பில்  வியாழக்கிழமை (01)  இடம் பெற்றது.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் இடம்பெற்றது.

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களது ஆலோசனைக்கு அமைவாக இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலில் குறித்த அமைச்சின் செயலாளர் அனுராத விஜயகோன்
பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.

குறித்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் விளையாட்டுத்துறை, சிறுகைத்தொழில் மற்றும் இளைஞர் விவகாரங்கள் தொடர்பாக மாவட்டத்தில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன், எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள பல்வேறுபட்ட திட்டங்கள் தொட்பாகவும் ஆராயப்பட்டன.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட காணிப் பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சினி முகுந்தன், விளையாட்டு அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர் ஐ.பி.விஜயரத்ன உள்ளிட்ட விளையாட்டுத்துறை சார்ந்த உத்தியோகத்தர்கள், சிறுகைத்தொழில் மற்றும் இளைஞர் விவகாரங்கள் தொடர்பான உத்தியோகத்தர்கள் அடங்கலாக பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top