உள்நாட்டு செய்திகள்

1000 ரூபா விவகாரம் – ஜீவன் இன்று கூறுவது என்ன?

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபா சம்பளம் வழங்கப்படவுள்ளமை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு கிடைத்த வெற்றி என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொழும்பு – சௌமிய பவனில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 1000 ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைகால தடை கோரி, கம்பனிகள் தாக்கல் முன்வைத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளமையினால், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இதன்படி, மார்ச் 5ம் திகதி முதல் கணக்கிலிட்டு, ஏப்ரல் 10ம் திகதி வரையான காலப் பகுதியில் 1000 ரூபா நாளாந்த சம்பளம் நிச்சயம் கிடைக்கும் என ஜீவன் தொண்டமான் உறுதியளித்துள்ளார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top