உள்நாட்டு செய்திகள்

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் யாழில் பகிஷ்கரிப்புப் போராட்டம்!

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் மதிய உணவு இடைவேளையுடன் பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டத்தை யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்துள்ளனர். மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பணிப் பகிஷ்கரிப்பு நடைபெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக தமது போராட்டத்தை ஆரம்பித்த இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர், வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் வரை பேரணியாக சென்றதுடன் ஆளுநருக்கான மகஜரினையும் கையளித்தனர். ‘ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளுக்கமைய வங்கி ஊழியர்களின் பயிற்சிக் காலத்தை இரண்டு வருடங்களுக்கு மட்டுப்படுத்துன’, ‘அதிகாரிகள் பயிற்சிக் காலத்தினை நீடித்து வங்கி ஊழியர்களது உழைப்பினைச் சுரண்டுவதை உடனே நிறுத்தக’, ‘பிரதமரின் உத்தரவிற்கமைய இலங்கை வங்கியின் பயிலுநர் ஊழியர்களை இரண்டு வருடங்களில் நிரந்தரமாக்குக’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top