தொழில்நுட்பம்

மூன்று உறுப்புகளுடன் இது தான் முதல் முறை பிறந்த குழந்தை – பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்..!

வடக்கு ஈராக்கின் மொசூல் நகரில் உள்ள மருத்துவமனையில் ஒரு பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். இதில் அந்த பெண்ணிற்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் இந்த குழந்தை மருத்துவர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஏனெனில் அந்த குழந்தைக்கு மூன்று ஆண் உறுப்புகள் இருந்துள்ளது. பொதுவாக 6 மில்லியன் குழந்தைகளில் ஒரே ஒரு குழந்தை மட்டும் 2 பிறப்புறுப்புகளுடன் பிறக்கும் என கூறப்படுகிறது.

ஆனால் மூன்று ஆணுறுப்புகள் இருப்பது உலகிலேயே இதுவே முதல் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர். அந்த குழந்தையை சோதனை செய்தபோது மூன்று ஆணுறுப்பில் ஒன்று மட்டுமே செயல்படுவதாகவும், மற்ற இரண்டை அகற்றினால் அந்த குழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதால் அதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top