உள்நாட்டு செய்திகள்

அரசியலுக்கு வர போகும் புஷ்பிகா டி சில்வா – அதிரடி அறிவிப்பு

அரசியலுக்கு வரும் எண்ணம் தனக்கு உள்ளதாக திருமதி இலங்கை அழகி போட்டியில் மகுடம் கிடைத்து, ஓரிரு நொடிகளில் இழந்த புஷ்பிகா டி சில்வா தெரிவிக்கின்றார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். பொலன்னறுவை மாவட்டத்தில் ஏற்கனவே தான் வேட்புமனு கோரியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அரசியலுக்குவரும் எண்ணம் தனக்கு உள்ள போதிலும், தற்போதைக்கு அந்த எண்ணம் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top