அரசியல்

ரஞ்ஜன் ராமநாயக்கவின் வெற்றிடத்திற்கு வர போவது யார்? – வெளியானது தகவல்

சிறைத் தண்டனை அனுபவித்துவரும் ரஞ்ஜன் ராமநாயக்கவின் பாராளுமன்ற ஆசன வெற்றிடத்திற்காக, கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட அஜித் மானப்பெரும நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி, கம்பஹா மாவட்டத்தில் அஜித் மானப்பெரும, 47,212 வாக்குகளை தனதாக்கிக் கொண்டிருந்தார். அஜித் மானப்பெரும, விருப்பு வாக்கு பட்டியலில் ஐந்தாவது இடத்தில் காணப்படுகின்றார். அஜித் மானப்பெருமனவின் பெயர், மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர், அவரது பாராளுமன்ற உறுப்புரிமை தொடர்பிலான அறிவிப்பு வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்படும். இந்த நிலையில், எதிர்வரும் ஓரிரு தினங்களில் அஜித் மானப்பெரும, பாராளுமன்ற உறுப்பினரான சத்தியபிரமாணம் செய்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top