உள்நாட்டு செய்திகள்

MT NEW DIAMOND கப்பல் நிறுவனத்திடமிருந்து நட்டஈட்டை அறவிடுவதற்கான இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு

இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான MT NEW DIAMOND கப்பல் நிறுவனத்திடமிருந்து நட்டஈட்டை பெற்றுக்கொள்வதற்கான இறுதி அறிக்கை இன்றைய தினம் (08), சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேராவிடம் கையளிக்கப்படவுள்ளது. கப்பலில் தீ பரவியமையினால் ஏற்பட்ட சுற்றாடல் பாதிப்புக்கள் தொடர்பிலான அறிக்கை, ஏற்கனவே சட்ட மாஅதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தொடர்பிலான கலந்துரையாடலொன்று, சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகளுடன் நேற்றைய தினம் (07) இடம்பெற்றுள்ளது. இந்த அறிக்கையில் காணப்பட்ட திருத்தங்களை மேற்கொண்டு, நட்டஈட்டை அறவிடுவதற்கான இறுதி அறிக்கையை இன்றைய தினம் சமர்ப்பிக்குமாறு சட்ட மாஅதிபர், அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top