உள்நாட்டு செய்திகள்

அடுத்த சில நாட்களில் பெரும்பாலான பகுதிகளில் மழைக்கான சாத்தியம்

அடுத்த சில நாட்களில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, ஊவா, வடமேற்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களில் மாலை அல்லது இரவில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.  இப் பகுதிகளில் சில இடங்களில் சுமார் 100 மி.மீ அளவிலான மழை வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம். மத்திய, சப்ரகமுவ மற்றும் மேற்கு மாகாணங்களில் சில இடங்களில் காலையில் மூடுபனி நிலைமைகள் காணப்படும்.

இடியுடன் கூடிய மழைக்காலங்களில் தற்காலிகமாக உள்ளூர்மயமாக்கப்பட்ட வலுவான காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின்  காரணமாக இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதியிலிருந்து 14 ஆம் திகதி வரை இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. 

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top