அரசியல்

ஸ்ரீலங்காவில் தடை செய்யப்படவுள்ள அரசியற்கட்சிகள்!

ஸ்ரீலங்காவில் சில அரசியல் கட்சிகளுக்கு இடைக்காலத் தடையை விதிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. கட்சிகளுக்குள் காணப்படும் கருத்து முரண்பாடுகள் காரணமாக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ள கட்சிகளின் செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்த முடிவெடுத்திருப்பதாக அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய 6 அரசியற் கட்சிகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இந்த கட்சிகளின் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளுக்கு சிலர் உரிமை கோரியுள்ளதால், சட்ட ரீதியான பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால், இதனை தீர்க்க அவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வழக்குகள் முடிவடையும் வரை இந்த கட்சிகளின் செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்த தீர்மானித்துள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்மானம் காரணமாக குறித்த கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், கட்சிகளின் பெயர்களை வெளியிட முடியாது எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அரசியல் கட்சிகளின் பெயர்கள், பதிவுசெய்யும் முறை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் புதிய கருத்து ஒன்றை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

L

அந்த வகையில், இன அடிப்படையிலான அல்லது குறிப்பிட்ட ஒரு பிரிவினரை இலக்கு வைத்து ஆரம்பிக்கப்படுகின்ற கட்சிகளை இனிவரும் காலத்தில் பதிவுசெய்யப் போவதில்லை என்பதை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top