உள்நாட்டு செய்திகள்

கல்லடிப் பாலத்திற்கு அருகாமையில் பாரிய சிரமதானப்பணி முன்னெடுப்பு.

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட கல்லடிப் பாலத்திற்கு அருகாமையிலுள்ள வாவிக்கரை ஓரங்களில் உள்ள பற்றைக் காடுகள் சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது.

வாவிக்கரை சூழல்கள் மற்றும் பொது இடங்களை சுத்தம் செய்து மாநகரை தூய்மைப்படுத்தும் செயற்பாட்டின் ஒரு அங்கமாகவே குறித்த சிரமதானப்பணி மாநகர ஆணையாளர் மா.தயாபரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட வாவிக்கரைகளில் காணப்பட்ட பற்றைக்காடுகள் மற்றும் அதனை சூழவுள்ள பல பகுதிகளில் பொது மக்களால் வீசப்பட்டிருந்த களிவுப் பொருட்களும் சிரமதான நடவடிக்கைகளின் மூலம் சுத்தம் செய்யப்பட்டு, அழகிய சூழல்களாக மாற்றப்பட்டுள்ளன.

இச்சிரமதானப் பணிகளில் மாநகர சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதாரத் தொழிலாளர்களும் ஈடுபடுத்தப்பட்டதுடன் மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவை வாகனங்களும் பயன்படுத்தப்பட்டன.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top