உள்நாட்டு செய்திகள்

பெட்டிக்லோ கெம்பஸிற்கு என்ன நடக்கும்? – அரசாங்கத்தின் தீர்மானம் வெளியானது

மட்டக்களப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பெட்டிக்லோ கெம்பஸ் நிறுவனத்தை, கொத்தலாவல பல்கலைக்கழகத்திற்கு கீழோ அல்லது வேறொரு பல்கலைக்கழகத்திற்கு கீழோ கொண்டு வருவதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (22) உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போதுள்ள பெட்டிக்லோ கெம்பஸின் ஊடாக, மாணவர்களுக்கு பட்டமளிப்பதற்கான அதிகாரத்தை, உயர்கல்வி அமைச்சோ அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவோ வழங்கவில்லை என அவர்ம கூறியுள்ளார். கடந்த ஆண்டு பல்கலைக்கழகத்திற்காக 30,000 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்ட போதிலும், இந்த ஆண்டு 41,500 மாணவர்களை இணைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். பெட்டிக்லோ கெம்பஸில் உள்ள சில வளங்கள், பேராதனை பல்கலைக்கழகத்தில் கூட கிடையாது என அவர் கூறுகின்றார்.

இலங்கையில் தற்போது 16 பல்கலைக்கழகங்கள் காணப்படுவதாக கூறிய அவர், எதிர்வரும் மாதம் முதல் இது 17ஆக அதிகரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பெட்டிக்லோ கெம்பஸை, பல்கலைக்கழக கட்டமைப்புடன் இணைத்துக்கொள்வதற்கான தீர்மானமொன்று காணப்படுவதாகவும் அவர் கூறுகின்றார். இந்த முறை கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடத்திற்கு மேலதிகமாக 100 மாணவர்கள் வரை இணைத்துக்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவிக்கின்றார். நாட்டின் நலனுக்காக சிறந்ததொரு தீர்மானத்தை தாம் விரைவில் எடுக்கவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மேலும் குறிப்பிடுகின்றார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top