உள்நாட்டு செய்திகள்

நாடு முடக்கப்படுமா? அரசாங்கத்தின் தீர்மானம் இதோ!

எதிர்வரும் தினங்களில் ஏதாவது ஒரு பிரதேசத்தில் அதிகளவான கொவிட் தொற்றாளர்கள் பதிவாவதாக இருந்தால் குறித்த பிரதேசத்தை கட்டாயமாக தனிமைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

எனினும் எதிர்வரும் நீண்ட வார இறுதி விடுமுறையின் போது நகரங்களுக்கு இடையில் பயணிப்பதை குறைத்து வீடுகளிலேயே தங்கியிருக்குமாறும் ஒன்று கூடுவதையும் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் இராணுவ தளபதி ​பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்

அதேபோல், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் தொற்று அனர்த்த நிலைமைக்கு மத்தியில் அடுத்து வரவுள்ள நீண்ட வார விடுமுறையில் நாட்டை முடக்கும் நோக்கம் இல்லை என்று இராணுவத் தளபதியும், கொவிட் 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியுமான ஜெனரல் சவேந்திர தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் தற்போது நடைபெறும் விசேட செய்தியாளர் சந்திப்பில் இராணுவ தளபதி இதனை தெரிவித்தார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top