உலகம்

பிரேசிலை அதிர வைக்கும் கொரோனா – ஒரே நாளில் 2659 பேர் உயிரிழப்பு

பிரேசிலில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 65 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 45 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 2659-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 3 லட்சத்து 86 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1.26 கோடியைக் கடந்துள்ளது.  தொற்று பாதிப்புடன் 11.76 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இதன்மூலம் உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் பிரேசில் மூன்றாம் இடத்தில் நீடிக்கிறது

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top