உலகம்

நடைபாதையில் படுத்து கிடந்த கொரோனா நோயாளிகள்: தொடரும் அவலம்!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து உள்ளது. கர்நாடகா மாநிலத்தில் தற்போது வரை 1 லட்சத்து 76 ஆயிரத்து 188 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனைகளில் படுக்கை வசதி பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.

குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் பீதர் மாவட்டத்தில் படுக்கை வசதி பற்றாக் குறையால் கொரோனா நோயாளிகள் நடை பாதையில் படுத்து உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பீதர் மாவட்டத்தில் 2822 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் மாவட்டத்தில் போதிய படுக்கை வசதி இல்லாமல் உள்ளது.

பீதர் இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள 750 படுக்கைகளிலும் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு உள்ளதால் மற்ற கொரோனா நோயாளிகள் படுக்கை வசதி இல்லாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதனால் கொரோனா நோயாளிகள் பலரும் மருத்துவமண்டையின் நடைபாதையில் படுத்து இருக்கும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top