உள்நாட்டு செய்திகள்

முகக்கவசம் இன்றி சுற்றித்திரிந்த 19 பேர் கைது!

முகக்கவசம் அணியாத மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறியதற்காக நேற்று 19 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோர் கிரிபத்கொட மற்றும் பிலியந்தலை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதவர்கள் மீது சட்டம் கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என்று அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதுபோன்ற சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத 3470 பேர் 2020 அக்டோபர் 31 முதல் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். வீட்டை விட்டு வெளியேறும்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், பொது போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்கள் இது குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார். இதேவேளை, சுகாதார அதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல் எந்த விழாவையும் நடத்த முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார். 

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top