உள்நாட்டு செய்திகள்

கொவிட் பரவலினால், பாடசாலைகள் மூடப்படுமா? − கல்வி அமைச்சின் தீர்மானம் வெளியானது

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகள் அனைத்தும், இதுவரை காலம் நடத்தப்பட்ட விதத்தில், அவ்வாறே நடத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது. பாடசாலைகளின் அதிபர்கள் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவினால், பாடசாலைகளை நடத்தும் விதம் குறித்து, திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில  பெரேரா தெரிவிக்கின்றார். கொவிட் வைரஸ் தாக்கத்திற்கு முகம்கொடுக்கும் விதம் குறித்து, கடந்த 23ம் திகதி, வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டலுக்கு அமைய, 50 வீத மாணவர்களுடன் பாடசாலைகள் நடத்தப்பட வேண்டும். அதேவேளை, மேலதிக வகுப்புக்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி நடவடிக்கையை தொடர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளும் மறுஅறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளன.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top