உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் ஒரு இலட்சத்தைக் கடந்த கொரோனா தொற்று – மேலும் நால்வர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்தைக் கடந்துள்ளது. நாட்டில் மேலும் 826 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுதப்பட்டுள்ள நிலையில் இதுவரையான பாதிப்பு ஒரு இலட்சத்து 517ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 94 ஆயிரத்து 155 பேர் குணமடைந்துள்ளதுடன், தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 638ஆகப் பதிவாகியுள்ளது. இந்நிலையில், இன்னும் ஐயாயிரத்து 724 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சைபெற்று வருகின்றனர். இதேவேளை, உலக அளவில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நாடுகளில் ஒன்றாகவும் கொரோனா பாதிப்பு வரிசையில் நோர்வேக்கு அடுத்து 89ஆவது நாடாகவும் இலங்கை பதிவாகியுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 642 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, கொழும்பு 02 பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய ஆண் ஒருவரும், ரத்கம பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய ஆண் ஒருவரும், குளியாப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் கொழும்பு 04 பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top